எங்களை பற்றி
தமிழர் மொழி, வரலாறு, பண்பாடு, கலைகள், அறிவியல், தத்துவம், தொழில்நுட்பவியல் ஆகியவற்றை ஆய்வு செய்யும் உயராய்வு பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்விப்பணி உலகெங்கினும் இருக்கும் தமிழர்களுக்குப் பரவச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 2006 ஆம் வெள்ளிவிழா ஆண்டில் தொடங்கப்பட்டது. தொலைநிலைக்கல்வியகம்.
தமிழால் எதுவும் முடியும் என்ற உயரிய நோக்கிலும் உயர்தரக் கல்வியைப் பகிர்ந்து அளிக்கின்ற வகையிலும் உருவாக்காப்பட்டதே தொலை நிலைக்கல்வித் திட்டம். தமிழ் மரபு சார்ந்த கலை, அறிவியல் தொழிநுட்பங்களைத் தலைமுறைகள் பயன்கொள்ள வழிவகை செய்தல்; கல்வி கற்கும் வாய்ப்பு வளம் அமையப் பெறாத சமுகத்திற்கு எளிய வகையில் அவ்வாய்ப்பினை வழங்குதல்;. தமிழர் தம் மரபு வழி சார்ந்த அரிவியல் தொழில்நுட்பங்கள், மொழி, இலக்கனம், இலக்கியம், வரலாறு தத்துவம், கலைகள் ஆகிய அனைத்துத் துறைக் கல்விகளை அனைவரும் அறிந்து கொள்ள வழி வகை செய்தல் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வியின் முக்கிய நோக்கமாகும். பாமரரும் பட்டங்கள் பெற வேண்டும் என்னும் அரிய நோக்கில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிறந்த கல்வி மையங்கள் வழியாக தக்க வழிகாட்டிகளுடன் தலைசிறந்த கல்வியை அளிக்க தமிழ்ப் பல்கலைக்கழகம் தன்னை மேன்மைப் படுத்திக் கொண்டுள்ளது.