பல்கலைக்கழத்தில் நேரடிச் சேர்க்கை(Spot Admission)
கல்வி மையங்கள் அருகாமைக்கு இல்லாதவர்கள் நேரடியாகப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி இயக்கியத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுச் சேர்ந்து கொள்ளலாம், அவ்வாறு நேரடிச் சேர்க்கைக்கு விரும்புவோர் கீழ்காணும் ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும்.
- விண்ணப்படிவம் மற்றும் சான்றிதழ்களின் சான்றொப்பமிடப்பட்ட (attested) மிகத் தெளிவான நகல்கள் (கல்வித் தகுதி, வயது முதலியன) இருந்தால் மட்டுமே சேர்க்கை செய்யப்பெறும்.
- மூல ஆவணச் சான்றுகள் மற்றும் மாற்றுச் சான்றிதழ் (Certificates in Original, Transfer Certificate) போன்றவை 10ஆம் வகுப்பு, +2 வகுப்பு, பட்டப்படிப்பு – மதிப்பெண் பட்டியல், தற்காலிகச் சான்றிதழ் அல்லது படிப்பு நிறைவுச் சான்றிதழ், என்ற வரிசையில் இடம்பெற வேண்டும்.
- விண்ணப்பப் படிவத்திற்கும், அடையாள அட்டைக்கும் தேவையான கடவுச்சீட்டு அளவிலான ஒளிப்படம்(photo)-2.
மூல ஆவணச் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின்னர்ச் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர். நேரடிச் சேர்க்கை பெறுவோர் கட்டணங்களுக்கான தொகையினைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள BOI வங்கியில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 வரை நேரில் செலுத்தலாம். செலுத்தப்பட்ட கட்டணங்களுக்கான தொகை எவ்வித காரணத்தை முன்னிட்டும் மீள வழங்கபட மாட்டாது; ஈடுகட்டவும் முடியாது
மூல ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் கற்போர்களுக்கு அவை மீள அளிக்கப்படும்,
நேரடிச் சேர்க்கை இயக்குநரால் உறுதி செய்யப்படும், தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.