1
மாணவர்கள் தங்கள் கல்விக் கட்டணங்களை பாங்க் ஆஃப் இந்தியா வங்கி பல்கலைக்கழக கிளையிலோ அல்லது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா(SBI Collect) Online Payment, இவற்றில் ஏதேனும் ஒரு சேவையின் வாயிலாகவே தமிழ்ப் பல்கலைக்கழக கணக்கில் செலுத்த வேண்டும்.
2
மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில், பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறன் படைத்த மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். ஆனால், மற்ற கட்டணங்களான சேர்க்கைக் கட்டணம், பதிவுக் கட்டணம், தகுதிக் கட்டணம், செய்முறைக் கட்டணம், அஞ்சல் செலவுக் கட்டணம், மதிப்பெண் சான்றிதழல் கட்டணம் யாவற்றையும் செலுத்துதல் வேண்டும்.
3
கிராமப்புற மாணவர்களுக்கு 10% கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படும். இதற்குத் தகுதியாக ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமலும், இதற்கான வட்டாட்சியரிடமிருந்து வருமானச்சான்று மற்றும் இருப்பிடச்சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
4
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலை வாயிலாகவோ அல்லது முறைக்கல்வி(Regular) வாயிலாகவோ பயின்று தேர்ச்சி பெற்றிருக்கும் முன்னாள் மாணவர்களுக்கு மொத்த கல்விக்கட்டணத்தில் 10% கட்டணச் சலுகை வழங்கப்படும்.
5
பிறந்த தேதி அடிப்படையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்குக் கல்விக் கட்டணத்தில் 10% சலுகை வழங்கப்படும். இதற்குத் தகுதியாக பிறந்த தேதி உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.